புலம்பல் 3:1-4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.

2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

4. என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

புலம்பல் 3