சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.

2. அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.

3. உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 1