சங்கீதம் 25:5-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

6. கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே.

7. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

8. கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

9. சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

சங்கீதம் 25