எண்ணாகமம் 3:45-48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

45. நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.

46. இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

47. நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

48. லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.

எண்ணாகமம் 3