4. இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.
5. எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
6. இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,
7. நோகா, நேபேக், யப்பியா,
8. எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
9. மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
10. சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.
11. இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
12. இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.
13. இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.
14. இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.